பெற்ற தாயை கொலை செய்து மூளையை வறுத்து சாப்பிட முயன்ற மகன்! சமயலறைக்கு சென்று அதிர்ச்சியடைந்த போலீசார்!
son killed his mom
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் அருகே உள்ள போடால்டா என்ற கிராமத்தில் ஓராயான் என்பவர் வசித்து வந்துள்ளார். போதைக்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் போகாமல் இருந்துள்ளார். இவர், தினமும் மது அருந்திவிட்டு தன் தாயை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மது குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கையில் பணம் இல்லை என்று தாய் கூறியதால், ஆத்திரம் அடைந்த சிதாராம் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் அடித்து உதைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் தாயின் தலையில் இரும்பு கம்பியை வைத்து அடித்து, தனது தாயின் மண்டைக்குள் இருந்து மூளையை தனியாக வெளியே எடுத்து, அதனை வறுத்து சமைத்து சாப்பிட முயன்றுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அண்ணி அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து சிதாராம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எண்ணெய் சட்டியில் தாயின் மூளையை வறுத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், தப்பி ஓடிய சிதாராமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.