விஷ்ணு என்ன தப்ப பேசிட்டார்?.. சொற்பொழிவாளரின் பின்தொடர்பாளர் பேட்டி.!
விஷ்ணு என்ன தப்ப பேசிட்டார்?.. சொற்பொழிவாளரின் பின்தொடர்பாளர் பேட்டி.!
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கு விழாவில் கலந்துகொண்ட விஷ்ணு என்பவர், சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றி இருந்தார். இதனை எதிர்த்து மாற்றுத்திறன் ஆசிரியர் கேள்வி எழுப்பியபோது, அவர் அளித்த பதில்களும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி கண்டனத்தை குவிக்கவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இன்று விஷ்ணு கைது செய்யப்பட்டார்.
அவர் பேசியதில் தவறில்லை
இந்நிலையில், விஷ்ணுவின் பின்தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அவர் மிகவும் சிறந்தவர், இனியவர், நல்ல ஆலோசனை வழங்குவார். அவரை கைது செய்யும் அளவு என்ன செய்தார் என தெரியவில்லை. அவரை பார்க்க வேண்டும் என நான் அங்கு வந்துள்ளேன். அவர் தனது கருத்தை மட்டுமே முன்வைத்து இருக்கிறார். அதனை எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம். அவர் தவறாக எதையும் பேசவில்லை. நான் அவர் பள்ளியில் பேசியதை ஆதரிக்கிறேன். பள்ளி சார்பில் அழைத்தபோது, என்ன பேச வேண்டும் என கேட்டுத்தான் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: அத்தை மக எனக்கு வேண்டாம்?.. பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவ மாணவர் தற்கொலை?.. சென்னையில் சோகம்.!
பதில் எப்படி தவறாகும்?
ஆன்மீக ரீதியாக அவர் பேசியுள்ளார், அதில் எந்த தவறும் இல்லை. சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே அவர் பேசினார். மேடையில் அவர் பொதுவாக தெரிவித்த கருத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக இருந்துள்ளது. அவரை மனரீதியாக அது பாதித்து இருக்கலாம். பிற யாரையும் அவர் எதையும் கூறவில்லை. தன்னிடம் பேச வந்தவரிடம் அவர் பதில் கூறினார். பொதுவான கருத்தை அவர் கூறி வந்தபோது, ஆசிரியர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். அவருக்கு அவர் பதில் வழங்கியது எப்படி தவறு ஆகும்?. என்னிடம் அவர் சிறந்தவராகவே விளங்கி இருக்கிறார். அவர் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பேசுகிறார்.
இதையும் படிங்க: கடன் தொகையை கேட்டு வங்கி அதிகாரிகள் அடாவடி செயல்? "போனை ஹேக் பண்ணிட்டாங்க" குமுறும் பெண்மணி.!