உலகின் மிக உயர்ந்த சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன.!
statue of unity specifications

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடி அறிவித்த முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை நிறுவுவது. அதன்படி அப்போதே அதற்கான வேலைகள் துவங்கப்பட்டன.
அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். உலகின் மிகவும் உயரமான இந்த சிலையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி இந்தியர்களாகிய நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
- இந்த சிலைக்கு STATUE OF UNITY என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- குஜராத்தின் சாது பெட் தீவில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- ராம் வி சுதர் என்ற சிற்பியின் வடிவமைப்பில் இந்த சிலை தயாராகி உள்ளது.
- சிலை அமைப்பதற்காக செலவான மொத்த தொகை - ரூ 2,989 கோடி.
- 250க்கும் மேலான பொறியாளர்கள் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சிலை அமைக்கும் பணிகளில் கிட்டத்தட்ட 3400 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
- 600 அடி உயரம் கொண்ட வல்லபாய் படேலின் சிலை உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையை பெறுகிறது.
- சிலை கட்டுமானத்திற்காக 2.25 கோடி கிலோ சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 2013ம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்ட திட்டம்.
- சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைப்பதற்கு 42 மாதங்கள் எடுத்தன.
- உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா-வை கட்டிய நிறுவனங்கள் சிலை கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளன.