ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று காலை கவ்வி சென்ற நாய், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.!
street dog away with leg from operation theatre
மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளியின் காலை தெரு நாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரை சேர்ந்தவர் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர்.அவர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை பரிசோதனை மருத்துவர்கள் ராம்நாத்தின் காலைசரிசெய்ய முடியாது அதனை அகற்ற வேண்டும் எனக் கூறினர்.அதன்படி அவரது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு கால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தது.
அப்போது திடீரென ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று அகற்றப்பட்ட ராம்நாத்தின் காலை கவ்விச் சென்றது.
மருத்துவமனைக்குள் புகுந்து நாய் ஒன்று நோயாளியின் காலை எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இச்சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.