விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்.! ஓடோடி வந்து உதவிய தெரு நாய்..! நெகிழ்ச்சி சம்பவம்.!
கேரளாவில் நபர் ஒருவர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது உதவிக்காக தெரு நாய் மக்களை அழைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம் என்று பலரும் கூறுவார்கள். அதனால் தான் பலரின் வீட்டிலும் நாய் வளர்ப்பார்கள். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத நன்றியுள்ளம் கொண்ட குணத்தை நாயிடம் காணலாம். அந்தவகையில் இதற்க்கு உதாரணமாக கேரளத்தில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜான் என்பவர் பணி முடித்துவிட்டு ஆழப்புழாவிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த உலோக கம்பி மீது வண்டியை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
இதனை கவனித்த தெருநாய் ஒன்று பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது. தொடர்ச்சியாக இந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் என்னவென்று குளத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஜான் குளத்தில் கிடந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ஜானை காப்பாற்றியுள்ளனர். இவர் தலைகுப்புற விழுந்ததால் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.