×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுவரை யாரும் செய்யாததை செய்த சன்னிலியோன்!. உலக முழுவதிலும் வரவேற்பு!.

இதுவரை யாரும் செய்யாததை செய்த சன்னிலியோன்!. உலகம் முழுவதிலும் வரவேற்பு!.

Advertisement


தென்மேற்கு பருவ மழை வெளுத்துவாங்கியதால் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்தது. நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது. இவ்வாறு பெருகி ஓடும் வெள்ளத்தால்,நிலச்சரிவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.மேலும் வெள்ளத்தில் சிக்கி பலரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். 

வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பேட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ஏராளமானோர் நிதி உதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் பேடிஎம் நிறுவனர் வழங்கிய நிதி உதவி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பில்லினியர்களில் ஒருவரான பேடிஎம் நிறுவனர் 10000 ருபாய் மட்டும் நிதி உதவி அளித்தது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.

அனைவராலும் கவரப்பட்ட பிரபல நடிகையான சன்னிலியோன் கேரள மக்களுக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார், இந்தியாவில் கோடி கோடியை சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் இப்போ எங்கே போனார்கள் என்று இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநில மக்கள் தங்கள் வீடு, உடைமைகள் போன்றவைகளை இழந்து தவித்து வருகின்றனர். இயற்கை சீற்றத்தால், பெரும் இழப்புகளை கேரளா சந்தித்துள்ளதால், கேரளாவிற்கு இந்தியா முழுவதிலுமிருந்து நிவாரண  உதவிகள் வந்து கொண்டுள்ளது

நடிகையான சன்னி லியோன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 5 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்ததை பற்றி சன்னிலியோன் இதுவரை எதுவும் கூறவில்லை.

கேரள மக்கள் தத்தளிக்கும் நிலையை அறிந்த சில பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ராம் தேவ், அம்பானி போன்ற தொழிலதிபர்கள் எங்கே போனார்கள் என்று இணையத்தில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunny Leone #kerala flood #flood relief
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story