அலுவலகத்திற்குள்ளேயே வைத்து பெண் வட்டாட்சியர் எரித்துக்கொலை! பதறவைத்த சம்பவம்!
tahsildar murdered in office
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை மர்மநபர் தீவைத்து எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துள்ளப்பூர்மெட் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த சுரேஷ் என்பவர் வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அவர் தீ வைத்து எரித்ததில் வட்டாட்சியர் விஜயாரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற சுரேஷை ஹயாத்நகர் அருகில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது கையில் தீக்காயங்கள் இருந்தன. இதனையடுத்து அவனை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது இடம் தொடர்பான பிரச்னையில் அநீதி இழைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே வட்டாட்சியரை எரித்ததாகவும் கூறியுள்ளார். பட்டப்பகலில் வட்டாட்சியர் எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.