நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி! தமிழக முதல்வர் அறிவிப்பு!
Tamilnadu cheif minister announced relief fund to army man family
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இருநாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் சிலகாலங்கள் பதற்றம் தணிந்து இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர், மூன்று இந்திய ராணுவ வீரர்களை கல்லால் தாக்கி கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர். இவர் 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி, தனது இன்னுயிரை விடுத்துள்ளார்.
இவரது வீர மரணத்திற்கு, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர் பழனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுவேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.