தமிழ்நாட்டின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்.. தமிழகமே கண்ணீர் சோகம்.!
தமிழ்நாட்டின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்.. தமிழகமே கண்ணீர் சோகம்.!
தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர், தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற நிலையில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மேகாலய மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு (வயது 18). இவருடன் 3 வீரர்கள், 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது ஷாங்பங்க்ளா என்ற ஒரு இடத்தில் எதிரே வந்த லாரி நிலைதடுமாறி, சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியுள்ளது. இதில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வீரர்களுக்கு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த தீனதயாளனின் உடல் இன்று சென்னை விமானம் மூலம் கொண்டு வரப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், வரும் 27ஆம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள நிலையில் சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க இருந்தார்.
ஆனால் தற்போது இவர் சாலை விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.