பள்ளி மாணவி மீது ஒரே லவ்.! திருமணம் செய்துகொள்ள ஆசிரியை செய்த காரியம்.! ஆச்சர்ய சம்பவம்.!
பள்ளி மாணவி மீது காதல் வயப்பட்ட ஆசிரியை.! ஆணாக மாறி நடந்த திருமணம்.! ஆச்சர்ய சம்பவம்.!
ராஜஸ்தான் பாரத்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் மீரா. இப்பள்ளியில் கல்பனா என்ற மாணவி படித்து வந்துள்ளார். அவர் கபடி வீராங்கனை. மீரா அவருக்கு கபடி விளையாட பயிற்சி அளித்து வந்துள்ளார்.
மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இருவரும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்று வருவது, அடிக்கடி சந்தித்து பேசுக்கொள்வது என இருந்துள்ளனர். இந்நிலையில் மீராவிற்கு கல்பனா மீது காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கல்பனாவுடன் சேர மீரா ஆணாக மாறவேண்டும் என எண்ணியுள்ளார் மேலும் அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு ஆணாகவே மாறியுள்ளார்.
தனது பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டுள்ளார். பின்னர் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கல்பனா கூறுகையில், எனக்கும் அவர் மீது விருப்பம் இருந்தது. அவர் அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் எனக் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.