ஆசிரியர் தினம்; ஆசிரியர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கும் தேசிய தலைவர்கள்
ஆசிரியர் தினம்; ஆசிரியர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கும் தேசிய தலைவர்கள்
ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதியை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி வருகின்றன.
ஆசிரியர் தினமான இன்று அணைத்து ஆசிரியர்களுக்கும் இந்திய தலைவர்கள் ட்விட்டர் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"தேசிய ஆசிரியர்கள் தினத்தையொட்டி இன்று அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள் தேசிய-அடுக்கு மாடி குடியிருப்புகள், நமது குழந்தைகளின் திறமை மற்றும் தன்மையை வடிவமைப்பவர். ஆசிரியர் அல்லது ஒரு குரு அறிவொளியூட்டும் மற்றும் அதிகாரமளிப்பதற்கான ஆதாரம்" என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது தன்னை பிரதமராகும் நிலைக்கு உயர்த்திய தனது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.