88 டன் மதிப்பிலான பூஞ்சை வைத்த கெட்டுப்போன ஐஸ்கிரீம்கள்.. வாந்தியை வரவழைக்கும் ப்ரீஸரின் நிலை.!
88 டன் மதிப்பிலான பூஞ்சை வைத்த கெட்டுப்போன ஐஸ்கிரீம்கள்.. வாந்தியை வரவழைக்கும் ப்ரீஸரின் நிலைமை.. பிரபல உணவகத்தில் பகீர்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்ரி-கொத்தகுடம் மாவட்டம், பத்ராசலம், ஸ்ரீ பத்ரா கிராண்ட் ஹோட்டலில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, 88 டன் அளவிலான ரூ.39600 மதிப்புள்ள பூஞ்சைகள் வைத்திருந்த ஐஸ்கிரீம், முட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவற்றை அழுக்கடைந்து மோசமான நிலையில் காணப்பட்ட பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கேக் பிரியர்களா நீங்கள்?.. பிரபல பேக்கரியில் பூஞ்சையுடன் சாப்பிட வழங்கப்பட்ட கேக்..!
உணவகத்திற்கு சம்மன் அனுப்பி வைப்பு
8 கிலோ பிரியாணியில் அதிக நிறமிகள் சேர்த்து உணவு சமைக்கப்பட்ட நிலையில் அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது. 10 கிலோ கெட்டுப்போன அரிசி, சரியாக பராமரிக்காத சமையல் கூடத்தின் நிலையை கண்ட அதிகாரிகள் விளக்கம் தரக்கூறி நோட்டிஸ் வழங்கி சென்றனர். ஹோட்டலுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.1000 பிரியாணிக்கு மருத்துவமனை பில் ரூ.1 இலட்சம்.. திருமண நாள் விருந்தால் சோகம்.!