ஜிம்முக்கு சென்றுவந்த 25 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு; குடும்பத்தினர் கண்முன் மாரடைப்பால் பரிதாபம்.!
ஜிம்முக்கு சென்றுவந்த 25 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு; குடும்பத்தினர் கண்முன் மாரடைப்பால் பரிதாபம்.!
இன்றளவில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது நல்லது என்றாலும், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கிறேன் என்ற ஆவலில் அதிகமாக உடலுக்கு பளுவை கொடுப்பது நல்லதல்ல.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் மக்களின் உணவு முறையே என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதா கிஷோரின் மகன் ஸ்ரீதர் நேற்று காலை ஜிம்முக்கு சென்று வீடு திரும்பி இருக்கிறார். வீட்டிற்கு வந்தவர் சிறிது நேரத்தில் மாரடைப்பால் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்த நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.