சொத்தை பிரித்துக்கேட்டு இறுதிச்சடங்கில் தகராறு செய்த மனைவி; 2 நாட்களாக காத்திருந்து உடல் நல்லடக்கம்.!
சொத்தை பிரித்துக்கேட்டு இறுதிச்சடங்கில் தகராறு செய்த மனைவி; 2 நாட்களாக காத்திருந்து உடல் நல்லடக்கம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெடப்பள்ளி மாவட்டம், மாந்தினி பகுதியில் வசித்து வந்தவர் சுனில். இவரின் மனைவி சந்தியா. தம்பதிகளுக்கு மகன் இருக்கிறார். இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சுனில் - சந்தியா கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுனில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதனால் அவரின் உறவினர்கள் சுயமாக சுனிலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மனைவி சந்தியா, வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கணவரின் சடலம் இல்லை. உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
சொத்து கேட்டு தகராறு
சம்பவ இடத்திற்கு விரைந்த சந்தியா, தனது கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய கூடாது என கூறியுள்ளார். மேலும், மகனுக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து வழங்காமல் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் கிட்டத்தட்ட 2 நாட்கள் இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் போயுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டுக்கறி எங்கடா?.. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பு மோதல்.. மண்டை உடைப்பு.!
பின் ஊர் தலைவர்கள் தலையிட்டு, சந்தியாவிடம் சொத்துக்களை பிரித்து வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து இருக்கின்றனர். இதன்பேரில் அவர் கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து இருக்கிறார். இதன்பின்னரே உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழலும் உண்டானது.
இதையும் படிங்க: வந்தே பாரத் இரயில் கண்ணாடிகளை சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞர்; பகீர் வீடியோ வைரல்.!