அரசு பேருந்தில் பிரசவம்..! குழந்தைகளுக்கு லைப் டைம் ஃபிரீ பாஸ்...!! அசத்தல் அறிவிப்பு..!!!
அரசு பேருந்தில் பிரசவம்..! குழந்தைகளுக்கு லைப் டைம் ஃபிரீ பாஸ்...!! அசத்தல் அறிவிப்பு..!!!
டி.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் தனது பேருந்தில் பிறந்த 2 சிறுமிகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகை அதிகாரத்தை வழங்கியுள்ளது.
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக்கழகமான டி.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் வி.சி சஜ்னார் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த நவ. 30 ஆம் தேதி பெத்தகோத்தபள்ளி கிராமம் அருகேயுள்ள நாகர் கர்னூல் பணிமனைக்கு சொந்தமான பேருந்தில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி ஆசிபாபாத் பணிமனைக்கு சொந்தமான சித்திப்பேட்டை பேருந்தில் மற்றொரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த இரண்டு நிகழ்விலும் பேருந்தில் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட, பேருந்தில் இருந்த டி.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்கள் மற்றும் பிற பயணிகள் சேர்ந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் வாயிலாக தாய் குழந்தைகளை பிரசவித்துள்ளார். பிரசவத்திற்கு பின்னர், அதே பேருந்து மூலமாக மருத்துவமனைகளில் தாய் - சேய் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நால்வரும் மருத்துவமனையில் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள்.
இரண்டு பெண்களுக்கும் உதவிய பேருந்து நடத்துனர், ஓட்டுநர், பயணிகள் அனைவர்க்கும் நன்றி. பேருந்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளதை சிறப்பிக்கும் பொருட்டு, அந்த 2 குழந்தைகளின் வாழ்நாட்களில் ஏற்படும் பேருந்து பயணத்தின் மொத்த செலவையும் மாநில போக்குவரத்து கழகம் ஏற்றுக்கொள்கிறது. 2 குழந்தைகள் தெலுங்கானா மாநில அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யும் சலுகை மற்றும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.