கர்ப்பிணி என்றும் பாராமல்.. நடுரோட்டில் தள்ளி.. கல்லால் கணவர் தாக்குதல்.! #வீடியோ.!
கர்ப்பிணி என்றும் பாராமல்.. நடுரோட்டில் தள்ளி.. கல்லால் கணவர் தாக்குதல்.! #வீடியோ.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 32 வயதான முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 22 வயதில் ஷபானா பர்வீன் என்ற மனைவி இருந்துள்ளார். ஷபானா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கக்கூடியவர்.
கடந்த ஒன்றாம் தேதி தன் மனைவியை முகமது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது, இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது கோண்டாபூர் நெடுஞ்சாலையில் கர்ப்பிணி என்றும் பாராமல் ஷபானாவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி இருக்கின்றார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பிரசவ வலி.. தள்ளுவண்டியில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற கணவர்.. பிஞ்சு மரணம்.!
அத்துடன் அருகில் கிடந்த கற்களை எடுத்து அவரை கொடூரமாக ஓங்கி அடித்துள்ளார். இவரது இந்த மோசமான தாக்குதலை பார்த்த யாரும் பயந்து கொண்டு அந்த பெண்ணிற்கு உதவ முன் வரவில்லை. இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் முகமது அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
போலீசார் வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, ஷபானாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணவர் முகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 32 வயது கர்ப்பிணி பெண் பலாத்காரம்.. 3 வயது மகன் கண்முன் கொடுமை.. காவலரின் அதிர்ச்சி செயல்.!