70 வருடமாக கோவிலை காத்த ராட்சச முதலை உயிரிழப்பு! கண்ணீர் விடும் பொதுமக்கள்.! கேரளாவில் ஆச்சர்யம்.!
70 வருடமாக கோவிலை காத்த ராட்சச முதலை உயிரிழப்பு! கண்ணீர் விடும் பொதுமக்கள்.! கேரளாவில் ஆச்சர்யம்.!
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் அனந்தபத்மநாப சுவாமி என்ற பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்திற்குள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாபியா என்ற ராட்சச முதலை ஒன்று வசித்து வந்துள்ளது.
இந்த முதலை அசைவ உணவுகளை தவிர்த்து கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த முதலை தெப்பக் குளத்துக்கு வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக இருக்குமாம். மேலும் அவ்வப்போது கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துச் செல்லும் எனவும் கூறப்படுகிறது.
தெய்வீக முதலையாக கருதப்பட்ட அதனைப் பார்ப்பதற்கெனவே பக்தர்கள் அடிக்கடி கோவிலுக்கு வருவார்களாம். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக பாபியா முதலை உயிரிழந்துவிட்டது. இது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குளிர்சாதன பெட்டியில் பாபியா முதலையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பலரும் அங்கு விரைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.