ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து..!! நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசம்...!!
ஜவுளி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து நாசமானது...!!
வங்காளதேசத்தில் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசமானது.
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜாரில் முவாயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கண்இமைக்கும் நேரத்தில் தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரும்புகையுடன் தீப்பிழம்பு எழுந்தது. மிகவும் நெரிசலான பகுதியானதால் இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். ஹெலிகாப்டரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.