பயங்கரம்... இளம் பெண்ணிற்கு பாலியல் வன்புணர்வு... வீடியோ மிரட்டல்.! புகாரை வாங்க காவல்துறை மறுப்பு.!
பயங்கரம்... இளம் பெண்ணிற்கு பாலியல் வன்புணர்வு... வீடியோ மிரட்டல்.! புகாரை வாங்க காவல்துறை மறுப்பு.!
உத்திர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண்ணை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த நபருக்கு எதிராக புகார் கொடுத்தும் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது பதற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மோகன் கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள திருமணமான பெண் ஒருவரின் கணவர் வெளியே சென்றிருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார். சம்பவம் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி நடைபெற்றிருக்கிறது.
அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிற்கு எதிராக தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். மறுத்தால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் அந்த நபர் மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் இது தொடர்பாக தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
மேலும் அந்தப் பெண்மணியை ஜாதி ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அந்த வாலிபர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சம்பவம் தொடர்பாக காவல்துறை தங்களுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறது அதன்படி "கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது பற்றி தற்போது தான் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இருதரப்பிற்கும் இடையே கலந்து சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.