நாடே காத்திருந்த அடுத்த மூவ்.! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!!
நாடே காத்திருந்த அடுத்த மூவ்.! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!!
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலமானது தற்போது வெற்றிகரமாக இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி57 ராக்கெட் உதவியுடன் பயணித்த ஆதித்யா எல் 1 விண்கலமானது 649 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி உந்துவிசை அளிக்கப்பட்ட நிலையில் விண்கலமானது முதல் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் ஆதித்யா எல் 1 விண்கலமானது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெங்களூரு இஸ்ரோ கட்டளை மையம் அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக, ஆதித்யா எல் 1 விண்கலத்தின் அடுத்த சூழ்ச்சி செப்டம்பர் 10, 2023 அன்று மதியம் 02:30 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.