விடாமல் விரட்டி விரட்டி தும்பிக்கையால் தாக்கிய யானை.. வனஊழியர் பலி.!
விடாமல் விரட்டி விரட்டி தும்பிக்கையால் தாக்கிய யானை.. வனஊழியர் பலி.!
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கவுடஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் கவுடா. மூடிகெரேயில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டும் குழுவை அமைத்தனர்.
இந்நிலையில் கார்த்திக் கவுடா இந்த குழுவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து பீராபுரா என்ற கிராமத்தில் யானைகள் கூட்டமாக நுழைந்து மக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற யானை விரட்டும் குழுவினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்துள்ளனர்.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்து ஒரு யானை வன ஊழியர்களை தாக்குவதற்காக விரட்டியுள்ளது. இதனால் வன ஊழியர்கள் பயத்தில் ஓடினர். அப்போது கார்த்திக் கவுடா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் எதிர் பாரத விதமாக யானை தும்பிக்கையால் கார்த்திக் கவுடாவை தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் கவுடா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மூடிகெரே தாலுகாவில் யானை தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யானை தாக்கி வன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.