பிரபல நடிகை இந்திய கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு பாலியல் புகார்.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
பிரபல நடிகை இந்திய கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு பாலியல் புகார்.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் மீது போஜ்பூரி நடிகை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த சம்பவத்தின் உண்மை பின்னணி வெளியாகியிருக்கிறது.
இந்திய மற்றும் மும்பை அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் பிரித்வி ஷா. இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போஜ்பூரி நடிகையான ஸ்வப்னா கில் பிரித்வி ஷா மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மது அருந்திவிட்டு தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான காவல்துறையின் விசாரணையின் போது பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பிரித்திவிஷா மும்பையின் சாண்டா க்ரூஸ் என்ற நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் உணவு அருந்தி கொண்டிருக்கிறார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த போஜ் பூரி நடிகையான ஸ்வப்னா கில் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு பிரித்வி ஷாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுக்கவே தன்னுடைய நண்பர்களுடன் அவரது காரை துரத்திச் சென்று ப்ரீத்வி ஷாவின் கார் கண்ணாடிகளை உடைத்து அவரையும் தாக்க உட்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக பிரித்விஷா அளித்த புகாரின் பேரில் ஸ்வப்னா மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ப்ரீத்தி ஷாவின் மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்தபோது அந்தப் புகாரின் உண்மை நிலவரம் என்ன என்று தெரிய வந்திருக்கிறது. சம்பவம் நடந்த தினத்தன்று ஸ்வப்னா கில் தனது நண்பர் சோபித் தாக்கூர் என்பவருடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு நடனமாடியது தெரியவந்துள்ளது. அப்போது சோபித் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷாவை தனது செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார். அதற்கு பிரித்திஷா தன்னை வீடியோ எடுக்க வேண்டாம் என தடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் பிரதிவிஷா ஸ்வப்னா கில்லை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.