வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம்.. கார்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய 25 வயது இளைஞர்.. பகீர் காட்சிகள்.!
வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம்.. கார்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய 25 வயது இளைஞர்.. பகீர் காட்சிகள்.!
தன்னை வேலையை விட்டு நிறுத்திய உரிமையாளர்களின் காரை சேதப்படுத்த ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராம்ராஜ் (வயது 25). இவர் நொய்டாவில் இருக்கும் கார்கள் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் கடந்த 2016 முதல் பணியாற்றி வருகிறார்.
இவரின் நிறுவனம் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே வேலை என்பதால், அவர் கார்களை சுத்தம் செய்ததும் துணிகளை சலவை செய்யும் பணிகளையும் கூடுதலாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இளைஞரை வேலையில் இருந்து நிறுத்த 15 குடும்பங்கள் முடிவு செய்து நிறுத்தியுள்ளனர். இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த இளைஞர் பார்க்கிங் பகுதியில் உள்ள அவர்களின் கார் மீது ஆசிட் ஊற்றியுள்ளர்.
இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. காரின் அலாரம் ஒலிகளும் அடுத்தடுத்து ஒலித்ததால் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவர்கள் விரைந்து வந்து ராம்ராஜை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வேலையை விட்டு நிறுத்தியதாலேயே ஆத்திரத்தில் கார்களின் மீது ஆசிட் ஊற்றியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ராம்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.