அப்படி போடு... இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... அந்த உறுப்பை வெட்டியஇளம் பெண்.!
அப்படி போடு... இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... அந்த உறுப்பை வெட்டியஇளம் பெண்.!
பீகார் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரின் அந்தரங்க உறுப்பை தற்காப்பிற்காக பிளே டால் அறுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவரது கணவர் வெளியே சென்று இருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். இரவு நேரத்தில் கதவிற்கு தாழிட மறந்து இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 27 வயது வாலிபர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் என்று இருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த ஷேவிங் பிளேடால் அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் வலியால் துடிக்கவே அவரிடமிருந்து தப்பி வந்த பெண் உதவிக்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அப்போது அந்த நபர் தப்பித்து சென்று விட்டார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.