#Breaking: ஒற்றை ஆளாக கம்பம் மக்களை கதறவிடும் அரிக்கொம்பன் யானை.. ஊருக்குள் புகுந்த கொம்பனால் பதற்றம்.!
#Breaking: ஒற்றை ஆளாக கம்பம் மக்களை கதறவிடும் அரிக்கொம்பன் யானை.. ஊருக்குள் புகுந்த கொம்பனால் பதற்றம்.!
அரிக்கொம்பன் யானை ஊருக்குள் புகுந்ததால் கம்பம் மக்கள் பதற்றமாகியுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானை கடந்த சில நாட்களாக கொலை செய்தது.
இந்த யானை நேற்று வனப்பகுதி வழியே பயணித்து, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் புகுந்தது. கம்பம் பகுதியில் உள்ள தெரு வீதிகளில் நுழைந்த அரிக்கொம்பன் சாலையில் இருந்த வாகனத்தை சேதப்படுத்தியது.
அரிகொம்பனின் வருகையை அறிந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் அதனை விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். மக்கள் யானையை காண வருகை தருவதால், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழ்விடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரும் விரைந்துள்ளனர். மக்கள் அலட்சியமாக யானையை பார்க்க ஆசைப்பட்டு வருகை தரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.