துப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடந்த கொடுமை -அப்படி என்ன நடந்தது தெரியுமா?
thuppaki-marriage-vinoth
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத் குமார். அவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு தெரியவந்துள்ளது.உடனே சஞ்சய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விரைந்து சென்று வினோத்தை மீட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை விசாரித்த நீதிபதிகள் வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.