×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மின்வாரிய ஊழியர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட கிராம மக்கள்! அதிர்ச்சி சம்பவம்!

tied Electricity Department officials to a pole when they were visiting the area to collect payments of electricity bills.

Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மின்சாரக்கட்டணத்தை கணக்கிடுவதிலும், கட்டணத்தை வசூலிப்பதிலும் நாடு முழுவதும் மின் துறையில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. 

இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் இருவர் தங்கள் பணி எல்லைக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை வசூலிக்க நேற்று சென்றனர். அதையறிந்த கிராம மக்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பில்லாமல் சிரமப்படும் மக்கள் கோபமடைந்து, ஊருக்கு வந்த மின்வாரிய ஊழியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.  இதனையறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, ஊழியர்களை கிராமத்தினரிடம் இருந்து காப்பாற்றி அழைத்துவந்தனர். 

அந்த கிராமத்தினரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#electricity #people angry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story