கூகுள் மேப்பால் நேர்ந்த விபரீதம்.. கொட்டிய கனமழையில் வழித்தவறி காரை ஆற்றில் இறக்கிய இளைஞர்கள்.. மூச்சுத்திணறி பலியான சம்பவம்..!
கூகுள் மேப்பால் நேர்ந்து விபரீதம்.. கொட்டிய கனமழையில் வழித்தவறி காரை ஆற்றில் இறக்கிய இளைஞர்கள்.. மூச்சுத்திணறி பலியான சம்பவம்..!
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு காரில் ஊர் திருப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இளைஞர்கள் காரை இயக்கி வந்த வழியில் கன மழை கொட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த இளைஞர்கள் google map உதவியுடன் மாற்றுப் பாதையில் சென்றுள்ளனர். இந்நிலையில் காரானது கொடுங்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கனமழை மற்றும் இருட்டின் காரணமாக வழி தவறி காரானது ஆற்றில் இறங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கார் முழுவதுமாக நீரில் மூழ்கியதில் முன்பக்கம் அமர்ந்திருந்த இருவரும் வெளியேற முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காரின் பின்பக்க கதவு திறந்து கொண்டதால் மற்ற மூவரும் அதிர்ஷ்டவசமாக நீரில் நீந்தி உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் அறிந்து அங்கு திரண்ட ஊர் மக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.