ஓடும் ரயிலில் நடந்த பரிதாபம்... செல்போன் திருட்டால் வட மாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்...!!
ஓடும் ரயிலில் நடந்த பரிதாபம்... செல்போன் திருட்டால் வட மாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்...!!
சென்னை கொருக்குப்பேட்டையில் மர்ம நபரிடமிருந்து செல்போனை மீட்க முயன்ற வட மாநில இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து விஜயவாடா செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரோனி (24) மற்றும் அஷ்ரப் ஷேக்(22), இருவரும் பயணம் செய்தனர்.
அப்போது கொருக்குபேட்டை ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படியில் நின்று ரோனி தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 20 வயது மதிக்க தக்க மர்ம நபர் ஒருவர் ரோனியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோனி தனது செல்போனை அவரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த போது ரயிலிலிருந்து கீழே விழுந்தார்.
அப்போது, ரோனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோனியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேசின் பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை இடையிலான ரயில் பாதையில் மர்ம ரயிலில் பயணிகளிடமிருந்து செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, உயர் அதிகாரிகள் தலையிட்டு வழிப்பறி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.