ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்கள்! இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது முன்பதிவு!
train service start from june 1
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். ஊரடங்கு காரணமாக அணைத்து விமானங்கள், ரயில்கள், பேருந்து போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டார்கள்.
இந்தநிலையில், புலம்பெயர் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கடந்த மாத இறுதியில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில்ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 21.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளனர்.
இந்தநிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று மே 21 காலை 10 மணிக்கு தொடங்கப்படும் எனவும், ரயில்கள் குறித்த விவரமும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.