நாளை முதல் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்! ஆவலுடன் காத்திருக்கும் பொதுமக்கள்!
Train service will start from tomorrow
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், நாடு முழுவதும் மே 12 முதல் பயணிகள் ரயில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நாளை மறுநாள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இந்த வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனால் ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை மறுநாள்(மே 12) முதல் ரயில்களை படிப்படியாக இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் நாளை டெல்லியில் இருந்து 15 ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். இதற்கான முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என தெரிவித்துள்ளது.