ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் துவங்குகிறது! ரயில்வேத்துறை அறிவிப்பு!
train tiicket reservation counter start from today
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். ஊரடங்கு காரணமாக அணைத்து விமானங்கள், ரயில்கள், பேருந்து போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கு நேற்று முதல் ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.05.2020 முதல் இயங்கவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்து முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.