முசிறி: ஆற்றில் குளித்துக்க சென்ற ஆசிரியர் நீரில் மூழ்கி பரிதாப பலி., 2 நாட்கள் கழித்து சடலம் மீட்பு.!
முசிறி: ஆற்றில் குளித்துக்க சென்ற ஆசிரியர் நீரில் மூழ்கி பரிதாப பலி., 2 நாட்கள் கழித்து சடலம் மீட்பு.!
அண்ணனுடன் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த தம்பி, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, மறைபரப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் மகன் சரவணன் (வயது 29). நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, சரவணன், தனது சகோதரர் உதயகுமாருடன் முசிறி காவேரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, உதயகுமார் குளித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், சகோதரர் சரவணனை விரைந்து குளித்துவிட்டு வரச்சொல்லியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தனது தம்பி வீட்டிற்கு வராத நிலையில், அதிர்ச்சியடைந்த உதயகுமார் ஆற்றில் சென்று சரவணனை பார்த்துள்ளார். ஆற்றில் சரவணன் துவைத்து வைத்திருந்த துணி மற்றும் இருந்த நிலையில், சரவணன் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் முசிறி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சரவணனின் உடலை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், 2 கி.மீ தொலைவில் உள்ள சுடுகாட்டின் அருகே சரவணனின் உடல் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
ஆசிரியர் சரவணனின் உடலை மீட்ட முசிறி காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற ஆசிரியர் உயிரிழந்த விவகாரம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.