தொலைக்காட்சி நிருபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!
tv reporter killed in UP
உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ளூர் இந்தி செய்தி சேனலில் பணிபுரியும் ஒரு தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வந்த ராதன் சிங் (45) என்ற பத்திரிகையாளரை நேற்று இரவு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பாலியா மாவட்டத்தில் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிகை துறையை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் ராதன் சிங்கை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.