காஷ்மீரில் பாலிவுட் பாணியில் நடந்த அண்டர்கவர் ஆபரேஷன்.! லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி உள்பட 2 பேர் சுட்டு கொலை.!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்பின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஸ்ரீநகரில் நேற்று சினிமா பாணியில் நடந்த அதிரடி தேடுதல் வேட்டையின்போது, முக்கிய பங்கரவாதி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைமை தளபதியான அப்பாஸ் ஷேக் ஆவார். அவர், டி.ஆர்.எப். என்ற அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். மற்றொருவர் துணை தலைவர் சகீப் மன்சூர் ஆவார். அவர்கள் 2 பேரும் அலூச்சி பாக் என்ற இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பயங்கரவாதிகளும் ஸ்ரீநகர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி வந்தனர். இதுதவிர இவர்கள் பல்வேறு தீவிரவாத வன்முறைச் சம்பவங்களிலும் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில், அண்டர்கவர் ஆபரேஷனில் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.