Breaking: கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி..! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு.! 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்த முதல் நாடு.!
UK buying 90 million coronavirus vaccine doses
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்துவந்த கொரோனா தடுப்பூசி வெற்றிபெற்றுள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 14,686,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 609,835 பேர் இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் பல்வேறு நாடுகள் போராடிவருகிறது.
இந்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடத்திவந்தது. ஏற்கனவே மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட இந்த தடுப்பூசி முதல் கட்டத்தில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு கட்டங்கள் சோதனை நடத்தப்படவேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தடுப்பு மருந்து வெற்றி பெற்றுள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் பிரிட்டன் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி மற்ற நாடுகளுக்கும் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸால் உலகமே பெரும் சோகத்தை சந்தித்துவரும் நிலையியல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்த தகவல் உலக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.