கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் செய்த செயல்.! கண்கலங்கிய உக்ரைன் வீரர்.! வைரலாகும் வீடியோ
கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் செய்த செயல்.! கண்கலங்கிய உக்ரைன் வீரர்.! வைரலாகும் வீடியோ
உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்தநிலையில், போலந்தில் நடந்த ரீமியர் லீக் கால்பந்து போட்டி மைதானத்தில் ரசிகர்கள் செய்த செயல் உக்ரைன் வீரரை கண்கலங்க வைத்துள்ளது.
போலந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில், போலந்தின் Benfica அணிக்காக விளையாடுகிறார் உக்ரைனிய வீரர் ரோமன் யரேம்சுக் (Roman Yaremchuk). நேற்றைய ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக் சப்ஸ்டிட்யூட்டாக அழைக்கப்பட்டார். மாற்று ஏற்பாடாக அழைக்கப்பட்ட வீரரின் கையில் கேப்டன் ஆர்ம் பேண்டை Jan Vertonghen கட்டினார்.
இதை சற்றும் எதிர்பாராத யரேம்சுக் கண் கலங்கினார். அப்போது அரங்கம் முழுவதும் நிறைந்த மக்கள் உக்ரைன் கொடியை உயர்த்திக் காட்டியும், நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், போர் வேண்டாம் போன்ற பதாகைகளையும் உயர்த்திக் காட்டினர். மேலும், அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வீரரை உற்சாகப்படுத்தினர். இதனை பார்த்த ரோமன் யரேம்சுக் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார். அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.