#BigBreaking: உக்ரைனில் இந்திய மாணவர் மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
#BigBreaking: உக்ரைனில் முதல் இந்திய மாணவர் மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ரஷியா - உக்ரைன் போர் உக்ரமடைந்துள்ள நிலையில், 6 ஆவது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள கார்க்கிவ் நகரில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் போரில் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் குடும்பத்தினருடன் இந்திய அதிகாரிகள் பேசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த கர்நாடக மாநிலம் ஹாவேரியை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா, எல்லையோர பகுதிக்கு செல்ல முனையும் போது, இரயில் நிலையம் செல்லும் வழியில் வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.