மே 17 ஆம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது! புதுச்சேரி முதல்வர் திட்டவட்டம்!
until may 17 wine shops not open in pudhuchery
தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் மே 17 ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் 40 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டன. மக்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்லும் காட்சிகள் வைரலானது.
தமிழகத்தில் திறக்கப்பட மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனால் இரண்டு நாட்கள் மட்டுமே கடைகள் திறந்திருந்தன.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறந்தாள் தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்குள் வர முயல்வர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே மே 17 ஆம் தேதி ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.