பாலியல் துன்புறத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளின் போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்க வேண்டும்.! யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!
up government punishment For offenders in crimes against women
உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தநிலையில்,பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளின் போஸ்டர்களை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல சாலை சந்திப்புகளில் வைக்கும்படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை பெண் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பெயர்கள், விபரங்கள் குறித்து அரசுக்கு தகவல் அளிக்குமாறு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பின்புலத்தில் பக்கபலம் ஆக செயல்படும் நபர்களையும் பொதுவெளியில் கொண்டுவரவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலமுதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் உத்தரவை பல மாநிலங்களில் பாராட்டி வருகின்றனர்.