முதல்வர் தலைமையில் 237 ஜோடிகளுக்கு போலி திருமணம் நடத்தி மோசடி; விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள்.!
முதல்வர் தலைமையில் 237 ஜோடிகளுக்கு போலி திருமணம் நடத்தி மோசடி; விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பலியா மாவட்டத்தில், கடந்த ஜனவரி 25ம் தேதி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், முதல்வர் குழு திருமண திட்டத்தின் கீழ் சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பல பெண்களுக்கு மணமகன் இல்லாமலேயே மாலை அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்ற சம்பவமும் நடந்துள்ளது. பல பெண்கள் மற்றும் ஆண்கள், ஜோடிகளாக நிறுத்தி வைக்கப்பட்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
கண்ணில் தென்பட்டோருக்கு தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் பணம் கொடுத்து, அவர்களை மணமக்கள் போல நடிக்க வைத்து போட்டோ எடுத்து அனுப்பி வைத்து இருக்கின்றனர் என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் செய்திகள் முதல்வரின் காதுகள் வரை சென்றுள்ள காரணத்தால், இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 568 ஜோடிகளின் 237 ஜோடிகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி திருமணங்களை நடத்த உறுதுணையாக இருந்த 2 பஞ்சாயத்து ஏடிஓ, எழுத்தர்கள், 12 புரோக்கர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியாக அரசின் சான்றிதழ் பெற்று, அரசின் சலுகைகளை பெற்ற நபர்களிடம் இருந்து அரசின் பணம் மற்றும் பரிசுகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.