காங்கிரஸ் மாரத்தான் போட்டியில் சோகம்.. முந்தியடித்ததால் தள்ளுமுள்ளு, நெரிசல்.. பதைபதைப்பு வீடியோ.!
காங்கிரஸ் மாரத்தான் போட்டியில் சோகம்.. முந்தியடித்ததால் தள்ளுமுள்ளு, நெரிசல்.. பதைபதைப்பு வீடியோ.!
ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் மாரத்தான் நிகழ்ச்சியில், மாரத்தான் வீரர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் மாரத்தான் தொடர் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று காலை திரளான ஓட்டப்பந்தய வீரர்கள் குவிந்திருக்க, போட்டி கொடியசைத்து தொடங்கப்பட்டது.
அப்போது, எதிர்பாராத விதமாக முதலாவதாக ஓட தயாராக இருந்தவர்களில் சிலர் தீடீரென கீழே விழுந்துவிட்டனர். கொடியசைத்துவிட்டதால் அனைவரும் முந்தியடித்து ஓடிச்செல்ல முயற்சிக்க, அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்துக்கொண்டவர்கள் கீழே விழுந்த பெண்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சில சிறுமிகள் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.