"உனக்கு டீ ஒரு கேடா"?.. கணவனின் கண்களில் கத்தரிக்கோலால் குத்திய மனைவி; ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!
டீ கேட்ட கணவனின் கண்களில் கத்தரிக்கோலால் குத்திய மனைவி; ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கீத். இவர் தனது மனைவியிடம் நேற்று டீ கேட்டிருக்கிறார். ஏற்கனவே குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த மனைவி திடீரென தனது கணவரின் கண்களில் கத்திரிக்கொலை எடுத்து குத்தி இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட அங்கித் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அஞ்கித்தின் மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கணவன் - மனைவிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணத்தின் போதிலிருந்தே இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கணவர் டீ கேட்டபோது ஏதோ ஒரு ஆத்திரத்தில் இருந்த மனைவி, தனது கணவரின் கண்களில் கத்தரிக்கோலால் குத்திய சம்பவமும் தெரியவந்துள்ளது.