மூடநம்பிக்கையால் மிகப்பெரிய அவலம்; பாம்பு கடித்த இளைஞரை கங்கையில் மிதக்கவிட்ட பூசாரியின் கொடுஞ்செயல்.! பரிதாப பலி.!
மூடநம்பிக்கையால் மிகப்பெரிய அவலம்; பாம்பு கடித்த இளைஞரை கங்கையில் மிதக்கவிட்ட பூசாரியின் கொடுஞ்செயல்.! பரிதாப பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மவாதை சேர்ந்தவர் மோஹித் குமார் (வயது 20). இவர் சம்பவத்தன்று பாம்பால் தீண்டப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரின் பெற்றோர் மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், உள்ளூர் பூசாரியிடம் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அவர் கங்கை நதியில் கயிற்றில் கட்டி தொங்கிக்கொண்டால், கங்கை நதி உடலில் இருக்கும் விஷத்தை தண்ணீருடன் இழுத்து சென்றுவிடும் என கூறியுள்ளார்.
பூசாரியின் மூடநம்பிக்கை பேச்சை கேட்ட இளைஞரின் பெற்றோர், அவர் கூறியபடி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மோகித் பரிதாபமாக உயிரிழக்க, மகன் உயிருடன் வராத காரணத்தால் தற்போது பெற்றோர் பரிதவிப்புக்கு உள்ளாகி மகனை நல்லடக்கம் செய்தனர்.
இதனிடையே மோகித் குமார் கங்கை நதியில் கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.