நண்பனின் காதலிக்கு ரகசிய வலை.. துரோகத்திற்கு கிடைத்த விபரீத பரிசு.. தவிக்கும் குடும்பம்.!
நண்பனின் காதலிக்கு ரகசிய வலை.. துரோகத்திற்கு கிடைத்த விபரீத பரிசு.. தவிக்கும் குடும்பம்.!
முகநூல் காதல்
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமாகி அவர்கள் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவருடன் விஷால் உரையாடி வந்துள்ளார். அந்த பெண் பற்றி தனது நண்பர் கௌதமிடம் விஷால் அடிக்கடி ஏதாவது கலந்தாலோசித்து வந்துள்ளார்.
துரோகம் செய்த நண்பன்
அப்போது, கௌதமுக்கு அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. எனவே, விஷாலுக்கே தெரியாமல் அவரது செல்போனில் இருந்து அவரின் காதலியின் செல்போன் எண்ணை எடுத்துள்ளார் கௌதம். அதன் பின் விஷாலின் காதலியுடன் அவர் ரகசியமாக பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
துரோகத்திற்கு கிடைத்த மரணபரிசு
இது விஷாலுக்கு தெரிய வர மிகுந்த ஆத்திரத்தில் இருந்த அவர் கௌதமை, "சரக்கு அடிக்கலாம் வா மச்சான்." என்று அழைத்து மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கிறார். சில நாட்களாக கௌதமை காணவில்லை என்று போலீசில் அவர் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் கௌதம் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கைதான விஷால்
இதனை விஷால் தான் திட்டம் தீட்டி செய்தார் என்பதை அறிந்த போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். தனது கேவலமான ஆசையினால் உயிர் நண்பனுக்கே துரோகம் செய்த, கௌவுதம் தன் உயிரை இழந்து, தன் குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டார். அதோடு நண்பனின் வாழ்க்கையையும் சிறையில் தள்ளிவிட்டார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!