கைதியோடு மதுக்கடைக்கு சென்ற காவல் அதிகாரி.. அரங்கேறிய சம்பவம்.!
கைதியோடு மதுக்கடைக்கு சென்ற காவல் அதிகாரி.. அரங்கேறிய சம்பவம்.!
சிறை காவலர் மதுபானம் வாங்க கைதியோடு சென்றார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருபவர், சம்பவத்தன்று கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார்.
அங்கு அவரை நீதிபதி முன் சமர்பித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு வருகை தந்துள்ளார். அப்போது, வரும் வழியில் இருந்த மதுபான கடைக்கு சென்றவர், மது புட்டிகளை வாங்கியதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தை படம் பிடித்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, அவை வைரலாகியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.