கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்; குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!
கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்; குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் கிளையை வணிகத்தலைவர் வினய் தியாகி, தொழிலதிபர் ஆவார். இவர் சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவரலால் வழிப்பறி கொள்ளைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார். கடந்த மே 03 ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.
காவல்துறை விசாரணை:
வினய் தியாகியின் கொலை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட அக்கி என்ற தக்ஸ் என்பவர் வினயை கொலை செய்தது உறுதியானது.
இதையும் படிங்க: 2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்.. காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!
தப்பிசெல்லமுயன்ற குற்றவாளி:
இதனையடுத்து, தலைமறைவன அக்கியை காவல் துறையினர் இன்று கைது செய்த நிலையில், அவர் அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனால் அவரை எச்சரித்த காவல் துறையினர் அறிவுரையை கேட்காமல் குற்றவாளி செயல்பட்டு இருக்கிறார்.
என்கவுண்டர் செய்து கொலை:
இந்த சம்பவத்தின் முடிவில் அதிகாரிகள் தங்களின் பாதுகாப்பு கருதி, வேறு வழியின் பதில் தாக்குதலில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் குற்றவாளியான அக்கி என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமியை இரயில்முன் தள்ளிவிட்டு கொன்ற கொடும்பாவி; காதல் பெயரில் உடல் துண்டாகி உயிரிழந்த சிறுமி.!