டெல்லியில் கடுமையான காற்றுமாசு; பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை.!
டெல்லியில் கடுமையான காற்றுமாசு; பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை.!
உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதன் காரணமாக டெல்லியில் கடுமையான காற்று மாசு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
400 புள்ளிகளை கடந்து காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாசுபாடு உள்ளது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை எடுக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.