நமக்கு டீ தான் முக்கியம் - காவல் வாகன ஓட்டுனரின் செயலால், தப்பிய கைதிகள்: அதிரவைக்கும் சம்பவம்.!
நமக்கு டீ தான் முக்கியம் - காவல் வாகன ஓட்டுனரின் செயலால், தப்பிய கைதிகள்: அதிரவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி இரயில் நிலையத்தில் கொள்ளை செயலில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் உட்பட 7 பேரை, ஜான்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மீண்டும் சிறைக்கு கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, எவ்விதமான பாதுகாப்பு வாகனமும் இல்லாமல் சிறைக்கு செல்லும் வாகனம் சென்றதாக தெரியவரும் நிலையில், காவல் அதிகாரியான ஓட்டுநர் தேநீர் குடிக்க சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, வாகனத்தில் இருந்த 7 கைதிகளில் 3 பேர் அங்கிருந்து வெளியேறி தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இதுதொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், ஓட்டுனரை பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.
தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களில் 3 பேர் 27 வயதான பிரிஜேந்திரா, 20 வயதான சைலேந்திரா மற்றும் 23 வயதான ஞானபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.