சாக்லேட் வாங்க சிறுகுழந்தையை தனியே அனுப்பும் பெற்றோரா நீங்கள்; இந்த பதைபதைப்பு வீடியோ உங்களுக்குத்தான்.!
சாக்லேட் வாங்க சிறுகுசந்தையை தனியே அனுப்பும் பெற்றோரா நீங்கள்; இந்த பதைபதைப்பு வீடியோ உங்களுக்குத்தான்.!
வீட்டிற்கு மிகவும் அருகே இருக்கும் கதைதானே என, சிறார்களை அலட்சியமாக வீட்டிற்கு வெளியே அனுப்பும் பெற்றோருக்கு எச்சரிக்கை பாடமாக அமைந்துள்ளது இந்த பதறவைக்கும் காணொளி.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சியை சேர்ந்தவர் சுராஜ் குப்தா. இவரின் மனைவி லக்சுமி குப்தா. தம்பதிகளுக்குக்கு 7 வயதுடைய விராட் என்ற மகன் இருக்கிறார். சிறுவன் நேற்று இரவு தனது வீட்டருகே இருக்கும் கடையில் சாக்லேட் வாங்க சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பியபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 5 நாய்கள் விராட்டை கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர்.
சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இதற்கு கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ள சிறுவனின் தாய் லட்சுமி குப்தா, "மாநகராட்சி நிர்வாகம் நாய்களின் கூட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு சிறுவனுடைய பக்கத்து வீட்டு பெண்மணி அவரை காப்பாற்றிவிட, மகனின் கதறல் கேட்டு வந்த தாய் அவரை ஆசுவாசப்படுத்தி மகனை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.